ஊடக சுதந்திரம் தொடர்பான தரப்படுத்தலில் சிறிலங்கா இந்த ஆண்டில் 10 இடங்கள் முன்னேறியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியை, பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சிறிலங்கா 131இவது இடத்தில் இந்த ஆண்டு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 141 ஆவது இத்தில் இருந்த சிறிலங்கா, இந்த ஆண்டில் 10 இடங்கள் முன்னேறியுள்ளது. இந்தப் பட்டியலில் 180 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஊடக சுதந்திரம் – 10 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா appeared first on Tamil France.
Source: srilanka