ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவுக்கு, கட்சியின் தலைவர் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலராகக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும், கட்சியின் உப தலைவராக ரவி கருணாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடக் கட்சியின் தவிசாளராக கபீர் காசிமும், பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், தேசிய அமைப்பாளராக நவீன் திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஐ.தே.கவின் புதிய நிர்வாகக் குழுவுக்கு ரணில் வாழ்த்து!! appeared first on Tamil France.
Source: srilanka