சிறீ­தர் தியேட்­டரை – டக்­ளஸி­ட­மி­ருந்து இழப்­பீட்­டு­டன் மீட்­கக் கோரி வழக்கு!

0

ஸ்ரான்லி வீதி­யி­லுள்ள சிறீ­தர் தியேட்­டரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வி­ட­மி­ருந்து, இழப்­பீட்­டு­டன் மீட்­டுத் தரு­மாறு அதன் 6 கூட்­டுச் சொந்­தக்­கா­ரர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் மாவட்ட நீதி­மன்­றில், சட்­டத்­த­ரணி கேச­வன் சயந்­தன் ஊடாக நேற்று முன்­தி­னம் வழக்­குத் தாக் கல் செய்­துள்­ள­னர்.

செல்­லையா இரத்­தி­ன­ச­பா­பதி கைம்­பெண் மகேஸ்­வரி இரத்­தி­ன­ச­பா­பதி, இரத்­தி­ன­ச­பா­பதி மகேந்­தி­ர­ர­வி­ராஜ், தயா­ள­கு­மார் பெண் மகேந்­தி­ர­ர­வி­ராணி, ஜெக­நா­தன் பரா­சக்தி, இரத்­தி­ன­ச­பா­பதி தேவ­ராஜ், இரத்­தி­ன­ச­பா­பதி ஸ்ரீதர் ஆகி­யோர் வெளி­நா­டு­க­ளில் வசிப்­ப­தால் தமது அற்­றோனி தத்­து­வக்­கா­ர­ரான செல்­லத்­துரை நித்­தி­யா­னந்­தன் ஊடாக இந்த வழக்­கினை தாக்­கல் செய்­துள்­ள­னர்.

அந்த மனு­வில், சிறீ­தர் தியேட்­டர் 1974 ஆம் ஆண்டை அண்­மித்த காலப் பகு­தி­யில் கட்­டப்­பட்­டது. வடக்­கில் நில­விய போர் கார­ண­மாக 1990ஆம் ஆண்­டி­லி­ருந்தோ அல்­லது அதற்கு அண்­மித்த காலப் பகு­தி­யி­லி­ருந்தோ சிறீ­தர் தியேட்­டர் மூடப்­பட வேண்­டி­ய­தா­யிற்று. போர் கார­ண­மாக வழக்­கா­ளி­கள் குடும்­ப­மாக யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமது வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி கடல்­க­டந்து குடி­பெ­யர வேண்­டிய கட்­டா­யத்­துக்கு உள்­ளா­னார்­கள்.

1997ஆம் ஆண்­டில் வடக்­கில் சிவில் நிர்­வா­கம் மீள­மைக்­கப்­பட்­டி­ருந்­த­தோடு, வழக்­கா­ளி­கள் சொல்­லப்­பட்ட சிறீ­தர் தியேட்­டரை மீளத்­தி­றக்க விரும்­பி­னார்­கள். 1996ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதமோ அல்­லது அதற்கு அண்­மித்த காலப்­ப­கு­தி­யில் இருந்தோ எதி­ராளி தனது அர­சி­யல் கட்­சி­யான ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் (ஈ.பி.டி.பி) உறுப்­பி­னர்­க­ளு­டன் சேர்ந்து வழக்­கா­ளி­க­ளது அறிவோ, அனு­ம­தியோ அல்­லது சம்­ம­தமோ இல்­லா­மல் சட்­ட­வி­ரோ­த­மா­க­வும் பலாத்­கா­ர­மா­க­வும் சொல்­லப்­பட்ட வள­வின் உட­மையை தன் வச­மாக்­கிக்­கி­னார் என்­றும் சட்­ட ­வி­ரோ­த­மா­ன­தும் சட்­ட ­பூர்­வ­மற்­ற­து­மான இருப்­பாட்­சி­யில் அத்­த­கைய காலத்­தி­லி­ருந்து இருந்து வரு­கி­றார் என்­றும் அவர்­க­ளுக்கு அறிய வந்­தது.

1997ம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­திலோ அல்­லது அதற்கு அண்­மித்த காலப்­ப­கு­தி­யிலோ இரண்­டா­வது வழக்­கா­ளி­யான இரத்­தி­ன­ச­பா­பதி மகேந்­தி­ர­ர­வி­ராஜை தொடர்பு கொண்ட எதி­ராளி உண்­மை­யில், தான் சொல்­லப்­பட்ட வளா­கத்­தில் சட்­ட­வி­ரோத இருப்­பாட்­சி­யில் இருப்­ப­தாக அவ­ருக்கு உறு­திப்­ப­டுத்­தி­னார்.

அந்த நேரத்­தி­லேயே இரண்­டாம் வழக்­காளி அவ­ரது சொல்­லப்­பட்ட வள­வில் அவ­ரது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தும் சட்­ட­பூர்­வ­மற்­ற­து­மான இருப்­பாட்­சியை வன்­மை­யாக ஆட்­சே­பிப்­ப­தாக எதி­ரா­ளிக்கு சுட்­டிக்­காட்­டி­னார். ஆயி­னும் சொல்­லப்­பட்ட வள­வில் எதி­ராளி தன்­னு­டைய அர­சி­யல் கட்­சி­யு­டன் சேர்ந்து சட்­ட­வி­ரோத இருப்­பாட்­சியை தொடர்ந்­தார்.

எதி­ராளி, தனது அர­சி­யல் கட்­சி­யு­டன் சேர்ந்து வழக்­கா­ளி­க­ளுக்கு எந்­த­வி­த­மான இழப்­பீட்­டுச் செலுத்­து­கை­யும் இன்றி சொல்­லப்­பட்ட வளா­கத்­தில் கடந்த 20 ஆண்­டு­க­ளாக சட்­ட­வி­ரோத இருப்­பாட்­சி­யில் இருந்து வரு­கி­றார்.

கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக நேர­டி­யா­க­வும் அந்த நேரத்­தில் தங்­களை பிர­தி­நி­தித்­து­வம் செய்­யும் சட்­டத்­த­ர­ணி­கள் ஊடா­க­வும் எதி­ரா­ளிக்­குப் பல்­வேறு கடி­தங்­கள் அனுப்­பி­ய­தோடு ஏனைய வடி­வங்­க­ளி­லான தொடர்­பா­டல்­கள் மூல­மும் சொல்­லப்­பட்ட வளா­கத்­தி­லி­ருந்து அவ­ரும் அவ­ரது அர­சி­யல் கட்­சி­யும் வெளி­யே­ற­வும்; சொல்­லப்­பட்ட வள­வின் வெற்று உட­மையை தம்­மி­டம் ஒப்­ப­டைக்­க­வும் அவர்­க­ளது சொல்­லப்­பட்ட சட்­ட­வி­ரோ­த­மான மற்­றும் சட்­ட­பூர்­வ­மற்ற இருப்­பாட்­சிக்­காக இழப்­பீட்டை செலுத்­த­வும் கோரிக்­கை­வி­டுத்து வழக்­கா­ளி­க­ளி­னா­லும் அல்­லது அவர்­கள் சார்­பி­லும் செய்­யப்­பட்ட சொல்­லப்­பட்ட கோரிக்­கை­க­ளுக்கு எதி­ராளி இணங்கி ஒழு­கத் தவ­றி­விட்­டார்.

வழக்­கா­ளி­கள் இந்த வழக்­கின் விட­யப் பொரு­ளின் பெறு­மதி அல்­லது முத்­தி­ரைத் தீர்­வை­யில் நோக்­கங்­க­ளுக்­காக ரூபா நூறு மில்­லி­யன் என்­ப­தாக மதிப்­பீடு செய்­கின்­றார். தீர்வை பதி­யப்­ப­டும் வரை 1996ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் தொடக்­கம் இழப்­பீ­டாக மாத­மொன்­றுக்கு ரூபா 75 ஆயி­ரம், அதற்­கான சட்ட வட்­டி­யு­டன் சேர்த்து செலுத்­து­மா­றும்; அதன்­பின்­னர் முழு­மை­யா­கச் செலுத்­தப்­ப­டும் வரை­யான கூட்­டுத் தொகைக்­கும்; எதி­ரா­ளிக்கு எதி­ரா­கத் தீர்ப்­பும், வழக்­குச் செல­வும், மன்று தகுந்­த­தெ­னக் காணும் இன்ன பிற உத­வி­க­ளை­யும், கோரி மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

Leave A Reply

Your email address will not be published.