இரு சிறுவர்கள் மீது, நேற்று வியாழக்கிழமை நடுவீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
Colombes, (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய இரு சிறுவர்களும், 13 வயதுடைய ஒரு சிறுவனும் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகியுள்ளனர். வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில், வீதியில் நின்றுகொண்டிருந்த மூவர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றதாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கலிபர் வகை கனரக துப்பாக்கியால் இத்துப்பாக்கி சூடு இடம்பெற்றதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மூவரில், இருவருக்கு நேற்று இரவே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.