திருமணத்தன்று சுட்டுக்கொல்லப்பட்ட மணப்பெண்.

0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த திருமண வீட்டாரை மறித்து துப்பாக்கியால் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் திருமணம் முடிந்த பின்னர் திருமன ஜோடிக காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திடீர் என அவர்கள் காரை மற்றொரு கார் வழி மறித்துள்ளது.

அந்த காரில் இருந்தவர்கள் திடீர் என துப்பாக்கியை காட்டி திருமண வீட்டாரை மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றை பறித்தனர்.

அப்போது மணப் பெண் அணிந்து இருந்த நகைகளையும் மிரட்டி பறிக்க முற்ச்சி செய்துள்ளனர். மணப் பெண் நகைகளை கொடுக்க மறுக்கவே கோபமடைந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் மணப் பெண்ணை சுட்டு விட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை பறித்தனர்.

இதை தடுக்க முயன்ற மணமகன் உட்பட மற்றவர்களையும் சரமாரியாக அவரகள் தாக்கியுள்ளனர், அதில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த கொள்ளை குறித்து திருமண வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.