SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதித்துள்ளது.
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்துக்கு கிடைத்த வெற்றி என CGT தொழிற்சங்க துணை பொது செயலாளர் Laurent Brun தெரிவித்துள்ளார். முன்னதாக இடம்பெற்ற இறுதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இதற்கு பின்னர் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அரசு உடன்படாது என பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த கோரிக்கையை எத்துவா பிலிப் நிராகரித்தார். அதன்பிறகு, ஆறு நாட்களின் பின்னர் , நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அரசு மிக அறிதி உறுதியான பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதாக அறிவித்துள்ளது.
வரும் மே மாதம் 7 ஆம் திகதி தொழிற்சங்கத்துக்கும், போக்குவரத்து துறை அமைச்சர், பிரதமர் எத்துவா பிலிப் உள்ளிட்ட தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை Matignon நகரில் இடம்பெற உள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.