நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவர் பைக் ஓட்டுவது போன்ற காட்சி சென்னையில் சூட் செய்யப்பட்டது. அதை செல்போன் வீடியோவில் படமெடுத்து வைரலாக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே குவித்து வைத்திருப்பவர் நடிகர் விஜய். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இவரது நடிப்பிற்கு ஏகேபித்த ரசிகர்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மெகா ஹிட் ஆகி தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.
தற்போது இவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கான படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள ஒரு ரோட்டில் பைக் ஓட்டி வருவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி மக்களோடு மக்களாக விஜய் பைக் ஓட்டி வருவது போல் படமாக்கப்பட்டது.
தளபதி ?? pic.twitter.com/g9l8KNdY5E
— CSK சிலுவை (@SiluvaM) April 28, 2018
அதற்காக திடீர் என பைக்கில் நடிகர் விஜய் ரோட்டில் பைக் ஓட்டி வந்தார். முன்னால் ஒரு லாரியில் கேமரா பொறுத்தப்பட்டு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இந்த சூட்டிங்கை அதே ரோட்டில் பைக்கில் சென்ற சிலர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர்.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சி உங்களுக்காக கீழே வழங்கியுள்ளாம்.
இந்த காட்சியில் நடிகர் விஜய் ஹோண்டா ஷைன் பைக்கை ஓட்டி வருகிறார். அவர் ஹெல்மெட் போட்டு கொண்டே பைக்கை ஓட்டி வருகிறார். படம் குறித்த எந்த வித தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில் இந்த வீடியோ ரசிகர் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மோட்டர் வாகன பிரியர் இவர் பல கார்களை வாங்கி தனது கராஜில் குவித்து வைத்துள்ளார். இவரது நடிப்பு துறையில் சக போட்டியாளராக உள்ள நடிகர் அஜித்தின் ஆட்டோமொபைல் ஆர்வம் குறித்து உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.