நிர்மலாதேவியுடன் நட்பு ரீதியாக பழக்கம் மட்டுமே இருந்து வந்ததாகவும், மாணவிகளை தவறான பாதையில் வழி நடத்த முயற்சிக்கவில்லை என சிபிசிஐடி காவல்துறையிடம் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நிர்மலாதேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யபட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனிடம் 4ஆவது நாளாகவும், கருப்பசாமியிடம் 3ஆவது நாளாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளையுடன் இருவரிடமும் விசாரணை முடிவடைய உள்ள நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதாகத் தெரிகிறது. முன்னதாக நடைபெற்ற விசாரணையில், தங்களுக்கு நீண்ட நாட்களாக நிர்மலாதேவியுடன் நட்பு ரீதியிலான பழக்கம் மட்டுமே இருந்து வந்துள்ளதாக முருகன் மற்றும் கருப்பசாமியும் தெரிவித்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.