பிரித்தானியாவில் 2ம், 3ம் தரவரிசையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் ASDA மற்றும் Sainsbury’s ஆகியன ஒன்றிணைவதற்கான பேச்சுக்களில் இடம்பெற்றுள்ளமையினால் ஆயிரக்கணக்காகோர் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிணையும் திட்டத்தினால் அருகருகே இருக்கும் அங்காடிகளில் ஏதேனும் ஒன்று மூடப்படும் அபாயம் இருப்பதனால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை தோன்றியுள்ளது. இது சம்பந்தமான பேச்சுக்கள் தற்சமயம் இடம்பெற்று வருகின்ற போதிலும் மேலதிகமான அறிவிப்புக்கள் நாளை 30ம் திகதி திங்கட்கிழமை காலை 7AM க்கு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய கொள்வனவு அதிகரிப்பினால் பிரித்தானியாவில் பல நிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற சவால்களை சமாளிக்கும் முகமாக இந்த திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.