அடுத்த அரையாண்டு காலப்பகுதிக்குள் ராஜபக்ஷர்களை இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் தமது தரப்பிற்கு பாரிய ஆபத்துகள் ஏற்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும்,ஒரு முறையான தலைமைத்துவம் நாட்டிற்கு அமையாததன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சிக்கும், நாட்டிற்கும் தற்போது நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளரையே முன்னிலைப்படுத்துவோம் எனவும், வேறு ஒருவரை முன்னிறுத்தப் போவதில்லை எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.பொன்சேகாவின் இந்தக் கருத்துகள் மூலம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து செயற்படும் அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்து விடப்படுவார் என்பது தெளிவாகுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Next Post