அடுத்த ஜனாதிபதி குமார் சங்ககார ! சர்வதேசமும் ஆதரவு

0

கிரிக்கெட் உலகில் குமார் சங்கக்கார இந்தப்பெயரை கேள்விப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தனது கிளாசிக் துடுப்பாட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகினை ஒரு கலக்கு கலக்கி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தவர் .இவர் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் .இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டு பல வெற்றிகளை தேடித்தந்தவர் .

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் சங்கக்கார தானும் தன் பாடுமாக இருந்து வருகின்றார் .இவரை அரசியலுக்குள் இழுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளன .

சங்கக்கார கிரிக்கெட் உலகில் மட்டுமன்றி பொது வாழ்க்கையிலும் நற் பெயர் பெற்ற ஒருவர் . அனைவராலும் விரும்பப்படும் ஒரு நல்ல மனிதன் .இலங்கை கிரிக்கெட் அணியில் இனத்துவேசம் அற்ற கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால் அது குமார் சங்கக்கார என்று தயங்கமால் கூறமுடியும் .

குமார் சங்கக்காராவுக்கு இலங்கை சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உண்டு .குறிப்பாக தமிழர்களால் விரும்பப்படும் ஒருவர் .இவரது இனத்துவேசம் அற்ற கருத்துக்களும் செயற்பாடுகளும் தான் விரும்படுவதற்கான காரணம் .

சங்ககாராவுக்கு சிறுபான்மை இனங்களில் உள்ள நல்ல அபிப்பிராயத்தை சாதமாக்கி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சி முயற்சி செய்துவருவதாக கூறப்படுகின்றது .

2020 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குமார் சங்கக்காராவை ஜனதிபதி வேட்பாளராக களம் இறக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி சங்ககாராவுக்கு வலை விரித்துள்ளதாம். இதற்கு சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் தூதரகங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்களாம்.

சாதாரணமாகவே ரணில் நரி புத்தி கொண்டவர் என்பது அனைவர்க்கும் தெரிந்த உண்மை . ரணில் தனது நரிப்புத்தியை சங்காவின் மீது பிரயோகிக்க முயற்சி செய்து வருகின்றார் .

சங்ககார பொதுவாகவே அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு அற்றவர் .ஆகையால் ரணிலின் நரித்தனம் சங்காவிடம் எடுபடாது என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள் . ஐக்கிய தேசிய கட்சி விரித்துள்ள வலையில் சங்கா சிக்கி தனது நற் பெயரை இழப்பாரா அல்லது தனக்கு இருக்கும் பெயர் புகழ் மரியாதையை தக்க வைத்து கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Leave A Reply

Your email address will not be published.