விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் கிடைத்ததாம்.
இதனால் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது.
தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார்,விமானப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர் சென்றுள்ளதுடன் விமானப்படையினர் அகழ்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர். அப்பாவிப் போராளியின் வீட்டை கிண்டி எதை எடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்?
அண்மைக்காலமாக பல இடங்களில் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. குறித்த வீட்டுக்குச் சொந்தக்காரர் தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.