இசைப்பிரியாவின் தாயார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை:ஒலிப்பதிவு இணைப்பு

0

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையின் போது விடுதலைப்புலிகளின் ஊடகப்போராளி இசைப்பிரியா சிங்கள இராணுவ காடைகளால் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார் .

இசைப்பிரியாவுக்கு நடந்த இந்த கொடூரத்தை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று இசைப்பிரியாவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து லங்காசிறி இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சினி, எமது மகள் இசைப்ரியாவுக்கு நடந்த கொடிய சம்பவம் முழு உலகிற்கும் தெரியும் .அதை மீண்டும் மீண்டும் போட்டு காட்டி எமது மகளை அவமானப்படுத்த வேண்டாம். எமது மகளுக்கு நடந்த கொடூரத்தை இன்னமும் எங்களால் மறக்க முடியவில்லை .திரைப்படத்தை வெளியிட்டு எம்மை மேலும் வேதனைப்படுத்த வேண்டாம் என்று கண்ணீர்மல்க தெரிவித்தார் .

இசைப்பிரியா தொடர்பான செய்திகளில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். உங்கள் வீட்டில் உங்கள் சகோதரிக்கு இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று இருந்தால் அதனை மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வெளியிடுவீர்களா ?தயவுசெய்து ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று எமது ஈழம் நியூஸ் இணைய குழுமம் சக ஊடகங்களிடம் தாழ்மையான கோரிக்கையை முன்வைக்கின்றது .

Leave A Reply

Your email address will not be published.