யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமையை பொறுப்பேற்றிருந்தார்.உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்திருந்தார்.
கொடூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பலருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இதில் இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நீதிபதிக்கு இடமாற்றம் வழங்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
