இவர்களைத் தெரிகிறதா?

0

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் பெரும் இனப்படுகொலை நடந்தேறியது. இந்தப்படுகொலையில் பல ஆயிரம் விடுதலைப்புலிகளும் அவர்களின் பெற்றோர்களும் அவர்களின் துணை மற்றும் பிள்ளைகளும் முள்ளிவாய்காலில் கொன்று சரிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு சிங்களதேசம் தன் படைகளைக்கொண்டு அரங்கேற்றிய இனப்படுகொலைக்கும் ,போர்க்குற்றங்களுக்கும் இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் இவற்றை மேலும்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய புதிய ஆதாரங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

இப்போது சிங்கள தேசம் உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கும் ‘வெள்ளைக்கொடி’ விவகாரத்தில் கொல்லப்பட்டவர்களில் முதன்மையானவராகப்பேசப்பட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்களின் துணைவியார் திருமதி நடேசன் வினித்தா அவர்களின் புகைப்படத்தோடு மேலும் கொல்லப்பட்ட ஆறுபேரின் புகைப்படங்களை வெளியிடுகின்றேன்.

இதில் சிறுவன் ஒருவரின் புகைப்படமும் அடங்கும். இந்த ஆறு பேரை இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை அடையாளம் காட்டக்கூடியவர்கள் இருந்தால் இவர் தம் உறவுகளுக்கு பயனுடையதாக அமையும்.

வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு சரண்டைந்தவர்களை உலக நீதிக்குப்புறம்பாக நரவேட்டையாடிய சிங்களதேசம் திருமதி நடேசன் அவர்களின் கொலைக்கும் என்ன நியாயத்தை சொல்லப்போகிறது?

-சுரேன் கார்த்திகேசு, போர்க்கால பத்திரிகையாளர், வன்னி.

Leave A Reply

Your email address will not be published.