ஒவ்வொரு மே மாத்திலும் தென்னிலங்கையில் அழிவு ஏன்?

0

தென்னிலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை!! நீரில் மூழ்கிய பல நகரங்கள் என்று செய்திகள் வெளிவந்தமுள்ளன. ஒவ்வொரு ஆண்டு மே மாத்திலும் தெற்கில் இத்தகைய அழிவுகள் இடம்பெறுகின்றன. தமிழர்களை கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்துவிட்டு எதுவும் இடம்பெறவில்லை என்று சிங்கள அரசு கூறி வரும் நிலையில் ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் தினத்தின்போதும் தெற்கு அழிவுகளைச் சந்தித்து வருகின்றது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடைமழை காரணமாக 9851 குடும்பங்களை சேர்ந்த 38040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 8 பேர் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

ஜிங் கங்கை பெருக்கெடுத்த காரணத்தினால் காலி மாவட்டத்தில் 1960 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பானதுகம பிரதேசத்தில் நில்வளா கங்கை பெருக்கெடுத்தமையினால் மாத்தறை, கடவத்தை, திஹகொட, மாலிம்பட, கும்புருபிட்டிய அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபந்தர ஆகிய பிரதேசங்கள்ல நீரில் மூழ்கியுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்றைய தினமும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும், இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு மாலை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் எனவும், இடி மின்னல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.