தமிழின படுகொலை நாளான இன்று மே 18 இனை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சிங்கள பௌத்த அரச காடைகள் நிறைவேற்றிய இனப்படுகொலையில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற உள்ளது .
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளார்கள்.