சிங்கள மக்களை கூட எங்கட மக்கள் என்றுதான் தலைவர் சொல்வார்! புரட்சிப் பாடகர் ஜே.ஆர். சுகுமார்

0


சிங்கள மக்களைக்கூட எங்கடை மக்கள் என்றுதான் தலைவர் சொல்லுவார் என்று தமிழீழ தேசிய தலைவர் பற்றி கூறுகிறார் தமிழீழத்தின் புரட்சிப் பாடகர்களில் ஒருவரான ஜே. ஆர். சுகுமார். நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா என்ற மிகவும் புகழ்பெற்ற பாடலைப் பாடிய சுகுமார் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள் என்ற பாடலின் மூலம் தமிழீழ இசை உலகில் நுழைந்தவர். தமிழீழ தேசிய தலைவரின் கரங்களால் எட்டு முறை பரிசில்களை பெற்ற இவர் தலைவரின் பாராட்டுப் பெற்ற சிறந்த பாடகராவார்.

அண்மையில் இவர் யாழ்ப்பாண பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்றிணை வழங்கியிருந்தார். இதன்போது, உங்களுடைய கலையுலக வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் எது என்று கேட்ட கேள்வி்க்கு தலைவரது பாராட்டை பெற்ற தருணங்களே வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார். அத்துடன் அந்தப் பரிசுகளே உயர்ச்சினை தந்ததாகவும் தலைவர் பிரபாகரன் வாழ்த்துகின்ற விதமே அற்புதமானது என்றும் சுகுமார் கூறியுள்ளார்.

தலைவர் பற்றி பாடகர் சுகுமாரன் கூறியது,

“சில சமயங்களில் தாம் இருக்கும் இடங்களை தேடி வந்து, சாந்தன், சுகுமாரைப் பார்ப்போம் என்று தலைவர் வருவார். காந்தி, விவேகானந்தர், யேசு முகங்களுக்குப் பின்னால் தெரியும் ஒளிவட்டம் அவரது முகத்தில் தெரியும். இனியில்லை என்ற அன்பானவர். சிங்கள மக்களை சொல்லுகின்றபோதுகூட எங்கடை மக்கள் என்றுதான் சொல்லுவாரே தவிர சிங்கள மக்கள் என்று சொல்ல மாட்டார். போராளிகளுக்கு மத்தியில் பேசும்போதுகூட ஒரு நாட்டில் இரு இராணுவக் கட்டமைப்பினருக்கிடையோயான சண்டை என்றுதான் கூறுவார். உயர்ந்த உள்ளம் கொண்ட அவரது கைளால் எட்டுத் தடவைகளுக்கு மேல் பரிசுகளைப் பெற்றுக்கிறேன்.” என்றார் பாடகர் சுகுமார்.

Leave A Reply

Your email address will not be published.