சிறிலங்கா விமான நிலைய கணனிகளுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்!

0

சிறிலங்கா விமான நிலைய கணணி மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா துதூவராலய கணனி போன்றவற்றினுள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) தகவல்களை கைப்பற்றி உள்ளனர்.

சிறிலங்கா விமான நிலைய கணனியிலிருந்து சிறிலங்கா விமான நிலையத்தில் பணி புரியும் 364 பணியாளரின் பதவி நிலை , பெயர் விபரம், தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் , சிறிலங்கா விமான நிலைய வர்த்தக நிலையகங்களில் 63 உரிமையாளரின் விபரம், தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் போன்றவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.

இதே போன்று 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா அரசுடன் வர்த்தக ரீதியாகவும், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான தகவல்களையும் வரும் தமிழர்கள் விபரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜெர்மன் , பிரான்ஸ் , லண்டன் ,சுவிஸ் ,கனடா , நோர்வே , டென்மார்க் , அவுஸ்ரேலியா , நெதர்லாந், பெல்ஜிம் , நியூஸ்லாந் போன்ற நாடுகளிலிருந்து சிறிலங்கா அரசுடன் மறைமுகமான தொடர்புகளை பேணும் தமிழர்களின் விபரம் வெளிநாடுகளில் இயங்கும் சிறிலங்கா துதூவராலய கணனிக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) தகவல்களை திரட்டி உள்ளனர்.

மே 18 தமிழின அழிப்பு நாளான அன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் 300- க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி சிங்கள அரசை ஆட்டம் காணவைத்ததை தொடர்ந்து மீண்டும் ஓர் சைபர் தாக்குதல் நடத்தி தற்போது ஆட்டம் காணவைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.