சுன்னாகத்து நீரில் எண்ணெய்

0

சுன்­னா­கம் உள்­ளிட்ட இடங்­க­ளில் நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம் என்று மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­விக்­கப்­பட்­டது.

மையச் சுற்­றா­டல் அதி­கார சபை­யின் முன்­னைய பணிப்­பா­ளர் நாய­க­மும் தற்­போ­தைய பிர­திப் பணிப்­பா­ளர் நாய­க­மு­மான கோலித இமால் முத்­துக்­கொட இவ்­வாறு தெரி­வித்­தார்.

நிலத்­தடி நீரில் தண்­ணீர் கலந்­தமை தொடர்­பான வழக்கு மல்­லா­கம் நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.ஜீட்­சன் முன்­னி­லை­யில் நேற்று வந்­தது. வழக்­கில் முன்­னர் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த ஐ.ரி.ஐ நிறு­வன அறிக்கை குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது. அதில் சாட்­சி­ய­ம­ளிக்­கும் போதே முத்­துக்­கொட இவ்­வாறு தெரி­வித்­தார்.

குறித்த அறிக்­கை­யைக் கொண்டு, நொதேர்ன் பவர் மின் உற்­பத்தி நிறு­வ­னத்தை மீளத் திறக்­க­லாம் என்று பிர­திப் பணிப்­பா­ளர் நாய­கம் கூறி­யி­ருந்­தார். வழக்­கின் சாட்­சி­க­ளில் ஒரு­வ­ரான அவ­ரி­டம் அந்த அறிக்கை தொடர்­பில் குறுக்கு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அதன்­போது அந்த அறிக்­கை­யில் குறை­பாடு உள்­ளது என்று பின்­னர் நீதி­மன்­றில் தெரி­வித்­தார்.

அறிக்கை தொடர்­பான தொடர் குறுக்கு விசா­ர­ணைக்­காக வழக்கு எதிர்­வ­ரும் செப்­டெம்­பர் 3 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. வழக்­கில் முறைப்­பாட்­டா­ளர்­கள் சார்­பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான கு.குரு­ப­ரன், ஜெ.ஜெய­ரூ­பன் ஆகி­யோர் முற்­பட்­டி­ருந்­த­னர்.

நொதேர்ன் பவர் சார்­பில் அர­ச­த­லை­வர் சட்­டத்­த­ரணி டிலான் பிலிப் மற்­றும் சட்­டத்­த­ர­ணி­க­ளான நளின்­தி­சா­நா­யக்க, திரு­மதி சிவ­பா­தம் ஆகி­யோர் முற்­பட்­டி­ருந்­த­னர்.

நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­தமை தொடர்­பில் சுகா­தார மருத்­துவ அதி­கா­ரி­யால் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கும் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்டு செப்­ரெம்­பர் 3ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

Leave A Reply

Your email address will not be published.