சுற்றுலாத்துறை அமைச்சின் இணையத்தினுள் நுழைந்து சுற்றுலா சென்ற தமிழீழ சைபர் படை

0

தமிழினப்படுகொலை நாளான நேற்றையதினம் மே 18 உலக தமிழர்கள் அனைவராலும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது .இந்த நாளினை முன்னிட்டு இலங்கை அரசின் சுற்றுலா அமைச்சின் இணையதளத்தினுள் தமிழீழ சைபர் படை புகுந்து விளையாடியுள்ளது.

நேற்றையதினம் இலங்கை அரசுக்கு உரித்தான சுமார் 300 க்கு மேற்பட்ட இணையதளங்கள் ஹக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன .ஆனால் அவை உத்தியோகபூர்வமற்ற செய்தியாக இருந்தது .தமது சுற்றுலா அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் ஹக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அரசின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஹக் செய்த நபர்கள் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ” இந்த இணையதளம் தமிழீழ சைபர் படையினால் ஹக் செய்ய பட்டுள்ளது ” என்ற செய்தியையும் பிரசுரித்துள்ளார்கள் .

இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கருத்து தெரிவித்த போது, “இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் எமது அமைச்சு அலுவலகத்தில் யாரும் இல்லை . இணையத்தளத்தினை என்னால் பாவிக்க முடியவில்லை . இணையத்தளத்தினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு திங்கட்கிழமை வரை பொறுத்திருக்க வேண்டும் ” என்று கூறினார் .

தமிழீழ சைபர் படை இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணையதளங்களை ஹக் செய்வது அரசுக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது .2017 ம் ஆண்டு மாவீரர் தினத்தன்றும் இலங்கை அரசுக்கு உரித்தான பல இணையதளங்கள் ஹக் செய்யப்பட்டு தமிழீழ எழுச்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.