தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நாடு இல்லை .ஆனால் தமிழர்கள் வசிக்காத நாடே இல்லை என்று கூறலாம் .உலகில் உள்ள முக்கியமான நாடுகளில் எல்லாம் ஈழத்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் .அதுமட்டும் அல்லது அவர்கள் வாழும் நாடுகளில் தங்களது பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் படியாக அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றார்கள் .
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பெண் ஒருவருக்கு சுவிஸ் பத்திரிகை தனது பாராட்டினை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது .யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட வினோதா என்ற யுவதியே சுவிஸ் பத்திரிகையினால் பாராட்டப்பட்டுள்ளார் .
வினோதா இவர் இலங்கை மட்டக்களப்பு தாதியர் பள்ளியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்து திருகோணமலை வைத்தியசாலையில் பணியாற்றி வந்தார் .அதன் பிறகு சுவிஸ் நாட்டுக்கு சென்று அங்குள்ள வைத்தியசாலையில் தனது பணியினை தொடர்ந்து வருகின்றார் .
சுவிஸ் நாட்டுக்கு சென்ற வினோதா அங்கு ICU மற்றும் பெயின் நேர்ஸ் ஆகிய துறைகளில் உயர்கல்வியை நிறைவு செய்து ஆர்காவோ என்ற மாநிலத்தில் உள்ள அசானா என்ற பிரபல வைத்தியசாலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிரேஷ்ட தாதியாக பணிபுரிந்து வருகின்றார் .
சுவிஸ் நாட்டில் தற்போது நோயாளர்களுக்கு உயர்தரமான சேவையை வழங்கும் பொருட்டு learn management of hospital என்னும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது .இந்த திட்டம் தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக அசானா வைத்தியசாலைக்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர் அங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பாக உள்ள வினோதாவின் மருத்துவ சேவையை நேரடியாக பார்த்து வியந்துள்ளார் .
வினோதா நோயாளர்களுடன் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் நடந்துகொள்கின்றார் .அத்துடன் உயர்தர மருத்துவ உபகரணங்களை கையாளும் திறன் கொண்டவராகவும் உயர்ந்த மருத்துவ படிப்பினை பெற்றுள்ளவராகவும் காணப்படுகின்றார் .வினோதாவின் சேவையையும் திறமையும் நேரில் கண்டு வியந்த வைனந்தால் என்ற பிரபல பத்திரிகையின் பத்திரிகையாளர் வினோதாவின் சேவையை பாராட்டி செய்தி பிரசுரித்துள்ளார் .