சொல்வதெல்லாம் உண்மை! நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் தடை!

0

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிற `சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தொடர்ந்து டிவியில் ஒளிபரப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் களமாக தனியார் சேனல் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது, `சொல்வதெல்லாம் உண்மை’ ரியாலிட்டி ஷோ. ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இடையில் சில பிரச்னைகளால் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஷோவிலிருந்து வெளியேற, நடிகை சுதா சந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சுதா சந்திரன் தொகுத்து வழங்கியபோது ரேட்டிங் குறைந்ததால் மறுபடியும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனே ஷோவுக்குள் வந்தார்.

ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளும் நிகழ்ச்சியைச் சுற்றி வந்தன. நடுத்தர மக்களை ஏமாற்றி ஷோவுக்குள் இழுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீதிமன்றமும் காவல்துறையும் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு நடிகையை வைத்து டிவியில் செய்து கொண்டிருக்கிறார்கள் எனச் சில நடிகைகளே எதிர்ப்புத் தெரிவித்தனர். நாகப்பன் என்கிற நபர் இந்த நிகழ்ச்சியால் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘இன்னும் எனக்கு முழுமையான விவரங்கள் வரவில்லை. நான் நிகழ்ச்சிக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே வந்த ஒரு வழக்கின் அடிப்படையில் தடை வந்திருக்குதுன்னு தெரியுது. முழுசா விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டுப் பேசுறேனே’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.