தந்தையின் வாகனத்தில் மோதுண்ட மகள் உயிரிழப்பு

0

தந்­தை­யின் வாக­னத்­தில் மோதுண்டு 5 வயது மகள் உயி­ரி­ழந்­தாள் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

வவு­னியா செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் காய­ம­டைந்த சிறு­மியே நேற்று உயி­ரி­ழந்­தாள். அதே இடத்­தைச் சேர்ந்த சுகந்­தன் துசாந்­தினி என்­ப­வரே உயி­ரி­ழந்­தாள்.

காலை­யில் வீட்­டி­லி­ருந்து ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்­குப் பணி­யா­ளர்­களை ஏற்­றிச் செல்­வ­தற்­கா­கப் புறப்­ப­டும்­போது தனது மகளை முள்­பள்­ளிக்கு ஏற்­றிச்­சென்று இறக்­கி­வி­டு­வது வழக்­கம். அவ்­வாறு இறக்­கி­விட்­டு­விட்டு வாக­னத்தை திருப்­பி­ய­போது வாக­னத்­தின் முன்­ப­கு­தி­யின் ஊடாக மகள் முன்­பள்­ளிக்­குள் நுழை­வ­தற்கு எத்­த­னித்­த­போது வாக­னத்­து­டன் மோதுண்­டார்.

அவர் செட்­டிக்­கு­ளம் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அதி­தீ­விர சிகிச்சைப் பிரி­வில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. எனி­னும் அது பய­ன­ளிக்­க­வில்லை. பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

Leave A Reply

Your email address will not be published.