தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் டிஜிபி க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டதுடன், அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசு மற்றும் டிஜிபி.,க்கு உத்தரவிட்டுள்ளது.