முள்ளிவாய்காலிலும் அதற்கு முன்னும் பின்னுமாக தமிழின
உரிமைகளை மீட்கும் போரில் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த
மாவீரர்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் ஒவ்வொருவரும்
ஒரு நிமிட
வணக்கம் செலுத்துவோம்!
நீதியற்ற உலக நாடுகளும்
அரக்க மனம்படைத்த இந்தியாவும்
பேரினவாத சிங்களமும் கூட்டு சேர்ந்து கொன்றொழித்த
எமது மக்கள் மீதும் மாவீரர்கள் மீதும் சத்தியம் செய்வோம்
நம் சந்ததிகள் கடந்தும் தன்மானத்தோடு இனம்வாழ
தொடர்ந்து போராடும்!
மேய்ப்பன் அற்ற ஆடுகளாய் அலையும் நாம் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எம்மை வஞ்சித்த வல்லரசுகளிடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!
ஈழம் நியூஸ் குழுமம்.
www.eelamnews.co.uk.