முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை இடம்பெற்று நாளையுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றது .உலக தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவாக நிலைத்திருக்கும் தமிழினப்படுகொலை நாளான மே 18 இனை நினைவுகூருமாறு பாடசாலை அதிபர்களிடம் வடமாகாண கல்வி அமைச்சர் திரு.கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய தினம் முற்பகல் 11 மணிக்கு முள்ளிவாய்க்காலில் இறந்த எமது தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக அனைத்து வடமாகாண பாடசாலைகளிலும் மௌன அஞ்சலி செலுத்துவதுடன் வடமாகாணத்திற்குரிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு இறந்தவர்களை நினைவுகூருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் .
மேலும் சிங்கள அரசினால் திட்டமிட்டு படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.