திரண்டு வந்த இளைஞர் படை, மிரண்டு போன இராணுவம் :காணொளி உள்ளே

0

தமிழின அழிப்பு நாளான மே 18 இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது .இறந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தனர் .

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வரிசையாக பேரணியாக சென்று எழுச்சி ஊட்டினார்கள். மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியை பார்த்த இராணுவம் திகைப்படைந்துள்ளது .

2009 ம் ஆண்டுவரை விடுதலைப்புலி போராளிகளை பார்த்து மிரண்டு போன இராணுவம் ஒன்பது ஆண்டுகளின் பின்பு பல்கலைக்கழக இளைஞர் படையை கண்டு திகைப்புக்கு உள்ளாகியுள்ளது . வீரமும் ,விவேகமும் நேர்மையும் நிறைந்த வே.பிரபாகரன் என்னும் ஒப்பற்ற தலைவன் பிறந்த மண்ணில் இளைஞர்கள் உணர்வெழுச்சி உள்ளவர்களாக இருப்பதில் வியப்பு எதுவும் இல்லை .மாணவர்கள் அணிதிரண்டு சென்ற காணொளியை கீழே பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.