செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் செக்கச் சிவந்த வானம்.
நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தை அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு உடனே படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
புகைப்படத்தை பார்த்தி சிம்பு ரசிகர்களோ, அரவிந்த் சாமி சார் எஸ்டிஆரை நிறைய படங்கள் பண்ணச் சொல்லுங்க ப்ளீஸ் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Ty for the nice pic Santa @santoshsivan #CCV pic.twitter.com/lenb89eWJH
— arvind swami (@thearvindswami) April 30, 2018