ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆலை இயங்காமல் இருப்பதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் , அரசு சட்டப்பூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.