பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்து : 100 க்கும் அதிகமானோர் இறப்பு

0

கியூபாவில் பயணிகள் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 100 க்கும் அதிகமான பயணிகள் இறந்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

105 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் கியூபாவின் ஹவானா விமான நிலையத்தில் இருந்து ஹோல்குயின் என்ற நகரை நோக்கி பயணித்து கொண்டிருந்த போயிங் 737 ரக விமானமே விபத்திற்கு உள்ளாகியுள்ளது .

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 100 கும் அதிகமான பயணிகள் உயிரிழந்துள்ளார்கள்.இதில் ஐந்து சிறுவர்களும் அடங்குவர்.

Leave A Reply

Your email address will not be published.