பாரிய அனர்தம் தவிப்பு ! மயிரிழையில் தப்பிய மக்கள்

யாழில் சம்பவம்

0

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதி ஊடாக பயணித்த ரயிலில் மோதுண்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் கடவை மூடப்படாத நிலையில் பயணித்த ரயில் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று மதிய வேளையில் அந்தப் பகுதியால் சென்ற ரயில்இ ஒலிகளை எழுப்பாத நிலையில் பயணித்துள்ளது.
இதன் போது, பாடசாலை நிறைவடைந்து பிள்ளைகளுடன் பெற்றோர் சென்று கொண்டிருந்தனர். ரயில் கடவையைக் கடந்தபோது ரயில் வந்து கொண்டிருந்தது.ரயில் பாதுகாப்பு கடவை போடப்படவில்லை. அதனால் ரயில் வரவில்லை என்று கருதி, அந்தப் பகுதியை கடந்து சென்றுள்ளனர். எனினும், திடீரென வந்த ரயிலை கண்ட மக்கள் பல பகுதியாக சிதறி ஓடியுள்ளனர்.இதன் காரணமாக தனது பாடசாலைக்கு வந்த பிள்ளையை கூட்டிச் சென்றவர் கடவைக்கு அருகில் வீழ்ந்துள்ளார். பலர் உயிர் தப்பியுள்ளனர்.தெய்வாதீனமாக பல உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.