தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிந்தனைகள் உலகப் புரட்சியாளர்களின் சிந்தனையாக பிரபலம் பெற்றவை. தமிழின் தலை சிறந்த பேராசிரியரான ஆ. வேலுப்பிள்ளை, தலைவர் அவர்களின் சிந்தனையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார்.
இந்த நிலையில் பிபிசித் தமிழ் ஊடகமானது “வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றை படைக்க முடியாது.” என்ற தலைவரின் சிந்தனையை வெளியிட்டமை தமிழீழ ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவரின் சிந்தனைக்கு சர்வதேச அங்கீகாரம் என தமிழ் ஈழப் பத்திரிகைள் பெரும் வெளியிட்டுள்ளன.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Prev Post