பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் -டிஜிபி டி.கே.ராஜேந்திரன்

0

போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெறும் என்றும் டிஜிபி கூறியுள்ளார். பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் டிஜிபி கேட்டுக்கொண்டுள்ளார். முதல்வருடன் ஆலோசனை நடத்திய நிலையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து விமானம் மூலம் போலீசார் விரைந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காவல் அதிகாரிகள் விரைந்தனர். பாதுகாப்பு பணியில் தெண்மண்டல ஐஜி சைலேஷ்குமார், மதுரை டிஐஜி பிரதீப்குமார் ஈடுபடவுள்ளனர். அதிரடிப்படை உதவியுடன் நெல்லை, தூத்துக்குடி கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் இயல்பு நிலையை திரும்ப கொண்டுவருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.