போரில் பறிகொடுத்த பிஞ்சு மகனை நினைத்து நெஞ்சு பதைக்க கதறிய தந்தை : காணொளி உள்ளே

0

மே 18 தமிழின அழிப்பு நாள் முள்ளிவாய்க்காலில் நேற்று முன்தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது . தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பொது மக்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை காணிக்கையாக்கியிருந்தனர் .

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் இறுதி போரில் பறிகொடுத்த தமது உறவுகளை நினைத்து உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர் .

கதறி அழுத உறவுகளின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது .இந்த புகைப்படங்களை பார்த்த சிங்கள பௌத்த இன வெறியர்கள் எமது உறவுகளின் அழுகை போலியானது என்று பின்னூட்டம் இட்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியதுடன் தமிழ் இளைஞர்களை சீண்டி இருந்தார்கள் .
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல நெகிழ்ச்சியான கண்களில் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று இருந்தது.

நினைவேந்தலில் கலந்து கொண்ட இளம் தந்தை ஒருவர் இறுதி யுத்தத்தில் பறிகொடுத்த தனது மகனை நினைத்து கதறி அழும் காணொளி எமக்கு கிடைக்கபெற்றுள்ளது. போரில் பறி கொடுத்த தனது பிஞ்சு மகனை நினைத்து இந்த தந்தை அழும் காட்சி மனதினை வாட்டி வதைக்கின்றது .

கடந்த ஒன்பது வருடங்களாக தனது இறந்த பிள்ளையை நினைத்து ஒவ்வொரு நொடியும் துடிப்பதாக இந்த இளம் தந்தை தெரிவித்துள்ளார் .

சிங்கள இனவெறியர்களே உங்களிடம் ஒரு கேள்வி .இந்த காணொளியும் போலியானதா ?இந்த காணொளியில் உங்கள் இராணுவத்தினரால் அநியாயமாக கொல்லப்பட்ட தனது பிஞ்சு மகனை நினைத்து கதறி அழும் இந்த தந்தையின் அழுகை போலியானதா ?உங்கள் மனசாட்சியை தட்டி விடுங்கள் பதில் கிடைக்கும்.

பௌத்தம் மதம் அன்பையும் அமைதியையும் போதிக்கின்றது .தூய்மையான பௌத்த மதத்தினை பின்பற்றும் நீங்கள் அந்த மதத்தை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது பௌத்த மதத்திற்கு இழுக்கு .உங்களுக்கும் பௌத்த மதத்திற்கும் என்ன தொடர்பு என்று புரிந்துகொள்ள முடியவில்லை .

சிங்கள இனவெறியர்களே இனியும் எமது உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் .இனவாத கருத்துக்களை கக்கி, இனத்துவேசத்தை கொட்டி எமது உணர்வுகளை சீண்டி பார்க்காதீர்கள் .அவ்வாறு சீண்டினால் மீண்டும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு நிர்பந்திக்கப்படுவார்கள் .

30 வருடங்களுக்கு முன்பு எமது அன்றைய கால தமிழ் இளைஞர்கள் தாமாக விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை.உங்கள் இனத்துவேசம், உங்கள் அடக்குமுறைகளும் எம் மீதான அடாவடிகளும் தான் அன்று எமது இளைஞர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு உள்ளாக்கியது என்பதனை மறந்து விடாதீர்கள் .

Leave A Reply

Your email address will not be published.