மக்கள்காணியை சுவீகரிப்பதை உடன்நிறுத்தவும்!சத்தியலிங்கம் அவசரக்கடிதம்

0

வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதைஉடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவசரக்கடிததெமான்றினைஇன்று (28.05) அனுப்பிவைத்தள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வவுனியா நகரத்திலிருந்து04 கி.மீ தொலைவில்ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய கிராமம்பேயாடிகூழாங்குளம் ஆகும்.

இங்கு பாடசாலை, பிரதேச்சபையின்உபஅலுவலகம், பொதுநோக்குமண்டபம், கடைத்தொகுதி,மத்தலங்கள்மற்றும் மக்கள் குடியிருப்புகள் இருந்தன. 1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது மேற்படி கிராமத்திலிருந்தமக்கள் இடம்பெயர்ந்ததைதொடர்ந்து இராணுவத்தினரால் இங்குமுகாம் மைக்கப்பட்டுதற்போது 56வதுபிறிகேட்இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் 30.09.2014திகதிஅதிவிசேட வர்த்தமானி மூலம் இராணுவத் தேவைக்காகாணிகளைசுவிகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் 11 குடும்பங்களுக்கான 8.3ஹெக்ரேயர்காணிஇராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாகமேற்படி முகாமைச்சூழவுள்ளமேலும் 5.96ஹெக்ரேயர்காணியைசுவீகரிப்பதற்கான முனைப்புகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள் ளது. வடக்கில் குறிப்பாகயாழ்ப்பாணமாவட்டத்தில் இராணுவத்தினரால்கையகப்படுத்தப்பட்ட காணிகள் தற்போது படிப்படியாகவிடுவிக்கப்படுகின்றநிலை யில்வவுனியாவில் புதிதாக்காணிகள்சுவீகரிக்கமுயற்சிப்பதானதுஎந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும்.

எனவே பாரம்பரியகிராமமானபே யாடிகூழாங்குளத்தில் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள்சுவீகரிக்கப்படுவதை உடனடியாகதடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமா றும் இராணுவத்தினர் வசமுள்ளகாணிகளைபொதுமக்களிடம் மீளஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களைதயவாக கேட்டுக் கொள்கின்றேன்என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.