கிளிநொச்சி பெரியபரந்தனில் புதிய மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பிரதேச மக்கள் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூன்று பாடசாலைச் சமூகங்கள், பாடசாலைகள், 10க்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் இணைந்து இந்த மனுவைகிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், கரைச்சிப் பிரதேச சபைத் தலைவருக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலருக்கும் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.
மதுபானசாலை அமைக்கப்படவுள்ள இடத்துக்கு அண்மையில் கிளிநொச்சி இந்துக் கல்லூி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்லூரி என்பன உள்ளன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பலமுறை போராட்டம் நடத்தியும், கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.