முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணைக்கு அழைப்பு

0

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி க.ஜெயக்குமார் எதிர்வரும் 28/05/2018ம் நாள் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியமை காரணமாகவே இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிளி வர்த்தக சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.

கிளிநொச்சி சந்தையில் மரக்கறி வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வரும் இவர் போரின்போது ஒரு காலை இழந்துள்ளார். க. ஜெயக்குமார் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.