முள்ளிவாய்க்காலில் மௌன விரதம் அனுஷ்டித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த போராளி

0

மே 18 தமிழினப்படுகொலை நாள் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் அனுஷ்டிக்கப்பட்டது . இறுதிப்போரில் இறந்த உறவுகளை நினைவுகூரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் தாயக உறவுகள் கலந்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல மனதை நெகிழவைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது .காக்கா அண்ணன் , இவர் விடுதலை புலிகளின் முன்னாள் மூத்த போராளிகளில் ஒருவர் .இவர் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்ற போது மௌன விரதம் அனுஷ்டித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் .

காக்கா அண்ணனின் கைகளில் ஓர் குறிப்பு புத்தகம் காணப்பட்டது .அதில் ” மே 18 ,நவம்பர் 27 மௌன விரதம் ” என்று எழுதப்பட்டிருந்தது .காக்கா அண்ணனின் இந்த செயல் பார்த்தவர்களை நெகிழச்செய்தது .

காக்கா அண்ணன் என்பவர் விடுதலைப்புலிகளின் மூத்த போராளி என்பதுடன் நாட்டுக்காக ஒரு மகனை மாவீரன் ஆக்கியவர்.அத்துடன் இறுதி யுத்தத்தில் ஒரு மகனை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

நாட்டுக்காக போராடியவர்கள்,தாயக மண் மீட்புக்காக உழைத்தவர்கள் , நாட்டுக்காக பிள்ளைகளை தியாகம் செய்தவர்கள் , இறுதி வரை வன்னியில் விடுதலை உணர்வோடு விசுவாசமாக இருந்தவர்கள் இன்று வரை அதே உணர்வோடு உள்ளார்கள் என்பது போற்றுதற்குரியது .
.
விடுதலை போராட்ட்டதுடன் சம்பந்தமே இல்லாதவர்கள் மற்றும் விடுதலை போராட்டத்தில் ஒரு துளி இரத்தம் ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள் தான் விடுதலை போராட்டத்தை விமர்சித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.