முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கட்சி பேதங்கள் இன்றி ஒற்றுமையாக அனுஸ்டிக்க வேண்டும்
பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன்
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக அனுஸ்டிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம்.இந் நிகழ்வை குழப்புவதற்கு பேரின வாதிகள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் அதற்க்கு ஒத்தாசை புரிவதுபோல் உள்ளது எம்மவர்களின் செயற்பாடுகள்.
கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் விடாமல் எமது உறவுகளுக்கு அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த நாம் அனைவரும் முன்வரவேண்டும் அப்போதே அந் நிகழ்வின் தாற்பரியம் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஒரு செய்தியை சொல்லும்.அனைவரும் ஒன்றுபட்டு முள்ளிவாய்க்காலில் மே 18 ஒன்றுகூடி எமது இறந்த மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம்.
பாலசிங்கம் கதிர்காமநாதன்
பிரதேச சபை உறுப்பினர்
மன்னார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு