தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 பேர் பலயாகிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தொடர்ந்து பரவிவருகின்றன..
பலி எண்ணிக்கையில் குழப்பம் நிலவி வரும் நிலையில்,தற்போது சில குறிப்பிட்ட வீடுகளுக்கு வரும் ஏவல்துறையினர் அங்கிருப்போரை மிரட்டுவதாக தகவல் பரவுகின்றது. விபத்தில் இறந்துவிட்டதாக கையெழுத்திடும்படி ஒரு படிவத்தைக்காட்டி மிரட்டுவதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர். விபத்து எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் இருப்பதால்,மக்களின் எதிர்ப்பு உணர்வையும் பதற்றத்தையும் குறைப்பதற்காக உண்மையை மறைக்க பொலிசார் முயற்சிப்பதாக தெரியவருகின்றது.