இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரும் தமிழின படுகொலை நாளான மே மாதம் 18 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக வடக்கு மாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் அந்நாளை அனைத்து மக்களும் அமைதியாக உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மே மாதம் 18 ஆம் திகதியை வடக்கு மாகாண சபை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே அன்றைய நாளில் அனைத்து தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்க வேண்டும்.
இதற்கமைய ஒவ்வொருவரும் அன்றைய நாளில் வியாபார நிலையங்களிலும் வீடுகளிலும் கறுப்பு கொடிகளை பறக்க விட்டும் களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்தும் உணர்வுபூர்வமாகவும் அமைதியாகவும் அனுஸ்டிக்க வேண்டும என தெரிவித்துள்ளார்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.

Prev Post