மே 18 தமிழினப்படுகொலை நினைவினை முன்னிட்டு இரத்ததானம் செய்த மாணவர்கள்

0

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் நாளையதினம் தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட உள்ளது .இதனை முன்னிட்டு பல்வேறு நற்காரியங்கள் தமிழர் பகுதிகளில் பலவேறு அமைப்புக்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது .

மே 18 நினைவு நாளை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் இரத்த தான முகாமினை ஏற்பாடு செய்துள்ளார்கள்.கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீட மாணவர் ஒன்றியமே இந்த இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது .

கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த இரத்த தான முகாமில் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியுள்ளார்கள் . பல்கலை மாணவர்களின் இந்த நற்செயலினை பலரும் பாராட்டியுள்ளர்கள்.

Leave A Reply

Your email address will not be published.