நல்லூர் யமுனா ஏரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (19-05-2018) வெள்ளிக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனத் தேடிய தவில் வித்துவானே இவ்வாறு நல்லூர் யமுனா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லூர் செம்மணி வீதியில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான இராமையா ஜெயராசா (வயது 66) என்ற தவில் வித்துவானே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என குடும்பத்தினர் தேடியுள்ளனர்.இந்நிலையில் யமுனா ஏரிக்கு அண்மையில் தண்ணீர் எடுக்க சென்ற பெண் ஒருவர் துர்நாற்றம் வீசியதால் ஏரியைப் பார்த்துள்ளார்.
அதற்குள் சடலம் இருப்பதை அவதானித்த அந்தப் பெண் அப்பகுதி கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம அலுவலர், சடலத்தை இனங்கண்டு அவரது குடும்பத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்தார்.
சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு இறப்பு விசாரணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.