யாழில் சென்ற ரணிலிற்கு கல்வீச்சு!

0

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் ஹோட்டலில் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்த வேளை அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

“யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார். பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைக்கு அதிகளவில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டது. அந்தவேளை யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.