வாள் முனையில் கொள்ளை

தென்மராட்சியில் சம்பவம்

0

தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவுப் பொழுதில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.

தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட பத்து பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.