அங்கத்தை இழந்து மக்கள் அவலப்பட புலிகளின் தங்கத்தை தேடும் சிங்கள அரசு

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் பொலிஸார் நேற்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர் . விடுலைப்புலிகள் வெடிபொருட்களை புதைத்து வைத்துள்ளதாக இரகசிய புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிய அகழ்வு நடவடிக்கை சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது. எனினும், எதுவித பொருட்களும் அங்கிருந்து கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.