அஜித்தின் மங்காத்தா பாணியில் இடம்பெற்ற வினோத திருமணம் -படங்கள் உள்ளே

0

நவீன நாகரிக உலகில் வித விதமான முறைகளில் திருமணங்கள் இடம்பெற்று வருகினறன .இன, மத, மொழி, கலாச்சாரங்களை தாண்டி புதுமையான முறையில் திருமண நிகழ்வை நடத்தவே இன்றையகால இளசுகள் விரும்புகின்றனர் .முழுமையாக மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட திருமணம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது .

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் வசிக்கும் இந்திக்க மற்றும் தில்ருக்ஷி என்ற தம்பதியினர் மோட்டார் சைக்கிள்களை மாத்திரம் பயன்படுத்தி வினோதமான முறையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் .

மங்காத்தா படத்தில் அஜித் ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிளை உயர்த்தி வித்தை காட்டியது போல அதே பாணியில் மணமகனின் நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களை ஒற்றை சில்லில் ஓடி பல்வேறு வித்தைகளை காட்டினார்கள் .

மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மோட்டார் சைக்கிள்களில் திருமணத்திற்கு வந்திறங்கி ஆச்சரியப்படுத்தினார்கள் . இந்த வினோத திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பட்டையை கிளப்பி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.