சுற்றுலா ஆஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்புக்கு 381 ஓட்டங்களை குவித்து சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அணி என்ற புதிய உலகசாதனையை நிலைநாட்டியது .
பகல் இரவு போட்டியாக இடம்பெற்ற இந்த போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து வேகமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள் .37 ஓவர்கள் மாத்திரமே முகம்கொடுத்த நிலையில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 239 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இங்கிலாந்திடம் மண்கவ்வியது .
2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி 34 வருடங்களில் இல்லாத மோசமான சாதனையொன்றை படைத்துள்ளது .34 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6வது இடத்திற்க்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தது முதல் ஆஸ்திரேலியா தொடர்ச்சியான தோல்விகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .