கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்யதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் சரணடைந்துள்ளனர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முந்தினம் ஒருவர் து செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் நேற்று காலை பொலீஸ்நிலையத்தில் சரணடைந்தார். குறித்த இருவரையும் நேற்றய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கிரேசியன் முன்னிலையில் முற்படுத்தியபோது இருவரையும் எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனையவர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பதில் நீதவான் பொலீஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தார்..
இதன் பின்னர் றே்று மாலை மேலும் மூவர் பொலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர், மற்றுமொருவரைநேற்றிரவு பொலீஸார் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட நால்வரையும் இன்று(25) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.
அத்தோடு ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.